திருப்பாவை பாடல் 04: ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பொருள் : மேகத்திற்கு அதிபதியாக இருக்கின்ற பர்ஜன்ய தேவனே, கடலில் இருந்து உற்பத்தியாகும் எங்கள் மழையாகிய தெய்வமே, நீ சிறிதும் எங்கள் விருப்பங்களை மறுக்காது நிறைவேற்றுவாயாக… […]
