October 14 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அரியலூர்

  1. அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்    :      கோதண்டராமர், வெங்கடாஜலபதி

தாயார்     :      ஸ்ரீதேவி பூதேவி

ஊர்        :      அரியலூர்

மாவட்டம் :      அரியலூர்

 

ஸ்தல வரலாறு:

முன்பு ஒரு சமயம் பல்லவ மன்னன் ஒருவன், அனைத்து போரிலும் வெற்றி கண்டதால், இறுமாப்புடன் இருந்தான். அப்போது, ஒருவர், மன்னனிடம், “போரில் நீங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், அதனால் ஏற்பட்ட பலரது துயரங்களை நீ அறிவாயா..மேலும் இதனால் உனக்கு எவ்வளவு களங்கம் தெரியுமா” என்று கூறி தனது பாவங்களைப் போக்க ராமபிரானை சேவிக்கும்படி ஆலோசனை வழங்கினார். மன்னனும் தன் தவறை உணர்ந்து ராமபிரானுக்கு கோயில் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

அம்பரீஷ மன்னனுக்கு திருமால் அருள்பாலித்த தலம் இதுவாகும். அம்பரீஷி மன்னன் திருமாலின் தசாவதாரங்களை காண விரும்பினான், திருமாலும் அதற்கு அருளியதால், இன்றும் அவன் பறவை வடிவில் இக்கோயில் கோபுரத்தில் அமர்ந்து இந்த தசாவதார சிற்பங்களைக் கண்டு மகிழ்கிறான். அம்பரீஷி முனிவர் துர்வாச முனிவரின் சாபத்துக்கு ஆளானார். திருமாலின் தசாவதாரங்களையும் ஒன்றாகக் கண்டால் சாபத்தில் இருந்து விடுபடலாம் என்று சாப விமோசனம் அளிக்கப்படுகிறது. இதனால் இத்தலத்தில் திருமாலை நோக்கி தவம் செய்கிறார் அம்பரீஷி முனிவர். இதன் காரணமாக தசாவதாரங்களையும் ஒரு சேர காண அருள்புரிகிறார் திருமால். அதனால் சாபவிமோசனமும் பெருகிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • அரி+இல்+ஊர் = அரியிலூர், பின்னர் காலத்தால் மருவி அரியலூர் என்றாகிவிட்டது. விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது என்று பொதுவாக கூறப்படுகிறது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் காணப்படும் பெருமாள் கோயில்களின் எண்ணிக்கை, அரி இல் ஊர் தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.

 

  • தலம் எதுவானாலும் ராமபிரான் தன்னிகரற்ற தெய்வமாகவே திகழ்வார் என்பதே உண்மை. என்றாலும் காலத்தாலும் புராணக் காரணத்தாலும் ஒவ்வொரு தலமும் தனிச்சிறப்பு பெறும். அந்த வகையில் இந்தத் திருத்தலத்தின் சிறப்பு என்னவென்றால் அரி இல் ஊர். அதாவது அரியாகிய மகாவிஷ்ணுவின் இருப்பிடம் என்பது தான் இந்த ஊரின் பெயருக்குக் காரணம் என்கிறார். தமிழ்த்தாத்தா உவே சாமிநாதய்யர்.

 

  • ஆறாம் நூற்றாண்டில் கோயில் கட்டப்பட்டதாக வரலாறு சொன்னாலும் அதற்கு முன்பே திருமால் இங்கே எழுந்தருளி இருக்கவேண்டும் என்கிறார்கள். அதற்குச் சான்றாக

 

  • பாற்கடல் வாசனான இறைவன் இங்கே வந்த காலத்தில் இங்கும் கடல் இருந்ததாகச் சொல்கிறார்கள். வரலாற்று ஆய்வாளர்கள். கடல் உள்வாங்கியதால் கடலுக்குள் இருந்து தோன்றிய பூமியே அரியலூர். தொல்லியலாளர்கள் கடலடியில் உள்ள உயிர்களின் படிமங்களை இந்த ஊரில் பல இடங்களில் அகழ்ந்து எடுத்திருக்கிறார்கள். இன்றும் கிடைக்கின்றனவாம்.

 

  • கடல் கொண்ட ஊர் பூம்புகார். கடல்தந்த ஊர் அரியலூர் கடல் என்றாலே அது திருமாலின் வீடுதானே..! என்று இவ்வூரைப் போற்றியிருக்கிறார் கிருபானந்த வாரியார்.

 

  • இங்கே தன் பத்து அவதாரங்களையும் ஒருசேர மண்டபத் தூண்களில் தசாவதாரச் சிற்பங்கள் அமைந்துள்ளது. . சிற்பங்கள் என்று நினைக்கவே இயலாதபடி ஒவ்வொன்றும் நிஜமாகவே எதிரில் இருப்பது போல் தோன்றுகின்றன. அதிலும் தூணில் இருந்தே தோன்றிய நரசிம்மரின் வடிவம்…. பயத்தோடு பக்தியையும் ஒருசேர ஏற்படுத்தும்

 

  • பல்லவர் கால பாணியில் அமைந்த சிங்கமுகத் தூண்கள் இங்கே இருப்பது கோயிலின் காலத்தினை உணர்த்துகிறது. தேர்போன்ற அமைப்பில் இரு குதிரைகள் இழுப்பது போன்ற கருவறை மண்டப அமைப்பு முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தின் திருக்கோயில் திருத்தி அமைத்து திருப்பணி செய்யப்பட்டிருப்பதை சொல்லாமல் சொல்கிறது, கோயில் பிற்காலத்தில் ஜமீன்தாரர்களாலும் பராமரிக்கப்பட்டுள்ளது.

 

  • பூமிக்கடியில் புதையுண்டு இருந்த இந்த கோயிலை பெருமாளே தூக்கி நிறுத்தினார் என்ற கதை ஊரில் கூடப்படுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக ஆலயக்கருவறை தேர் போன்ற வடிவில் இருப்பதும். ஒரே பீடத்தில் அமைந்த கோதண்ட ராமர், சீதா தேவி, லட்சுமணன், அனுமன் ஆகியோரின் சிலை அருகில் உள்ள விக்கிரமங்கலம் என்ற ஊரில் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

 

  • மலர் மகளுக்கு மட்டும்தான் ராமாவதாரத்தில் இடம் உண்டு என்றாலும் இத்தலத்தில் பூமகளுக்கு ஒரு சிறப்பு உண்டு. இங்கே உள்ள ராம விக்கிரகம் பூமித்தாயால் சுமந்து தரப்பட்டது என்பதுதான் அது.

 

  • வைகுண்ட ஏகாதசி விழாவில் நாச்சியார் திருக்கோலத்துக்குப் பிறகு கோதண்டராமர் மோகினி அலங்காரத்துடன் விதியுலா செல்கிறார்.

 

திருவிழா: 

வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனி, பிரம்மோற்சவம்

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி 11 முதல் மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்

அரியலூர்.

 

போன்:    

+91 99435 30122, 90479 12201.

 

அமைவிடம்:

அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

Share this:

Write a Reply or Comment

2 × 3 =