December 04 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   ஊட்டி

  1. அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     காசிவிஸ்வநாதர்

அம்மன்         :     விசாலாட்சி

புராண பெயர்    :     திருக்காந்தல்

ஊர்             :     ஊட்டி

மாவட்டம்       :     நீலகிரி

 

ஸ்தல வரலாறு:

சிதம்பரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிதம்பரம் ஸ்ரீ ஏகாம்பர சுவாமிகள் நீலகிரியின் மலை பிரதேசத்தில் தவம் இயற்றினார். ஒரு கட்டத்தில் இவருக்கு, அடியார் வடிவில் தட்சிணாமூர்த்தியாக காட்சி தந்த சிவபெருமான், புலித்தோல் ஆசனமும், பாதக்குறடும் வழங்கி அருள்பாலித்தார். அதன்பின் கோவையில் உள்ள பழமையான பேரூர் மடம் சென்று, தவத்திரு ராமலிங்க அடிகளாரைச் சந்தித்து, துறவு மேற்கொண்டார், இங்குள்ள சித்தர்கள் மடத்தை 1882 ல் ஏகாம்பர தேசிகர் தோற்றுவித்தார். திடீரென தன்னை மறந்த ஒரு ஞான நிலையில் உலகியல் வெறுத்து துறவு பூண்டார். அதன்பிறகு நீலகிரி முழுக்க காடுகளிலும், மலைகளிலும் இஷ்டம் போல் சுற்றித் திரிந்து தவம் செய்ய வந்தார். இறைவனை நினைத்து அடிக்கடி சமாதி நிலை அடைந்து தவத்தில் மூழ்கி விடுவதால் இவரின் சீடர்கள் இவரது பணியை கவனித்தனர். பின்பு இவரது காலத்துக்குப்பின் வழிவழியாக வந்த சீடர்கள் சித்தர்கள் மடத்தை கவனித்து வந்தனர். ராய போயர் என்பவர் காலத்தில் இப்போதுள்ள பாணலிங்கம் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வழிபாடு ஆரம்பமானது. இங்கு வாழ்ந்த சித்தர்களின் சமாதி அனைத்தும் கோயில் வளாகத்திற்குள் உள்ளது.

ஏகாம்பர சுவாமிகள். இவருக்குப் பிறகு வந்த நிரஞ்சனப் பிரகாச சுவாமிகளுக்கு, காசி விசுவநாதர் ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. ராயபோயர் என்ற சிவனடியாரும், அவர்தம் மனைவியான கற்பகத்தம்மையாரும் இந்தப் பணியில் இணைந்தனர். மஞ்சம்மாள் என்பவர் தலைமையில், அடியார்கள் ஆதரவில் ஆலயப் பணிகள் தொடர்ந்தன. கி.பி. 1913-ல் யோகீந்தர் ஓம்பிரகாச அடிகளார் தலைமையில் பாலதண்டாயுதபாணி சிலை நிறுவப்பட்டது. இம்மடத்தின் பெருமை அறிந்து பயனடைந்த, ஜெய்ப்பூர் அரசி ராஜராஜேசுவரி, 1932-ல் அருளுரை மண்டபம் அமைத்துத் தந்தார். இதன்பின் 1935-ல் யோக தட்சிணாமூர்த்தி சிலை அமைக்கப்பட்டது.

 

கோயில் சிறப்புகள்:

  • பாணலிங்கமே இங்கு மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 

  • உதகமண்டலத்தில் அமைந்த பழமையான சிவாலயம், ஆறு சித்தர்களின் நினைவாலயம் கொண்ட கோவில் எனப் பல்வேறு பெருமைகளைக் கொண்டதாக விளங்குகிறது, ஊட்டி காந்தள் காசி விசுவநாதர் திருக்கோவில்.

 

  • இறைவன் கிழக்கு முகமாகப் புதுப்பொலிவோடு காட்சி அருளுகிறார். சன்னிதியில் தெற்கு நோக்கிய அன்னை விசாலாட்சி எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள்.

 

  • பாண லிங்கம் வடித்தெடுக்கப் படுவதில்லை. பிரம்மா, விஷ்ணு முதலிய தேவர்கள் பூஜித்த புண்ணிய நதிகளான கங்கை யமுனை நர்மதை போன்றவற்றில் லிங்க வடிவிலே உருண்டோடி வரும்.

 

  • உதகமண்டலத்தில் அமைந்த பழமையான சிவாலயம்,

 

  • காந்தியடிகள் வியந்து போற்றிய மடம் எனப் பல்வேறு பெருமைகளைக் கொண்டதாக விளங்குகிறது, ஊட்டி காந்தள் காசி விசுவநாதர் திருக்கோவில்.

 

  • சிவபெருமான், ஆன்மாக்கள் உய்யும் பொருட்டுப் பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கும் திருத்தலங்கள் பல உள்ளன. அந்த வகையில் கொங்குநாட்டின் சிவ வடிவமாக விளங்குவது வெள்ளியங்கிரி மலை. அதேபோல சக்தி வடிவமாகத் திகழ்வது, நீலகிரி மலையாகும். சக்தி வடிவான நீலகிரியின் உதகமண்டலத்தில் உள்ள திருக்காந்தளில், அருள் வழங்கும் விதமாகத் திகழ்கிறது காசி விசுவநாதர் ஆலயம்.

 

  • இவ்வாலயத்திற்கான சிவலிங்கத்தினை நர்மதை நதியில் இருந்து நான்முகன், திருமால், தேவர்கள் ஆகியோர் வழிபட்ட பூணூல் ரேகை தாங்கிய பாணலிங்கம், 1958-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, நிறுவப்பட்டது. இதன்பின் சில அடியார்களின் ஆதரவோடு திருப்பணிகள் முடிந்து, குடமுழுக்கு விழா நடந்தேறியது. ஆலய வளாகத்தில் சித்தர்கள் நினைவாலயம், காசி விசுவநாதர் திருக்கோவில் என இரண்டு பகுதிகள் அமைந்துள்ளன.

 

  • இங்குள்ள ஆலயம் எழும்புவதற்கு முன்பாக உருவான, தட்சிணாமூர்த்தி திருமடாலயத்தைத் தோற்றுவித்தவர் ஏகாம்பரதேசிக சுவாமிகள், இவருக்குப் பின் வந்த சித்தீசுவரர் ரத்தின அம்மணி அம்மையார், யோகீந்தர் ஓம் பிரகாச சுவாமிகள், நிரஞ்சன் பிரகாச சுவாமிகள், மஞ்சம்மாள், சுப்பிரமணிய சுவாமிகள் என ஆறு சித்தர்களின் ஜீவசமாதிகள் அமைந்த மண்டபமே சித்தர்கள் நினைவாலயமாக போற்றப்படுகிறது. இதுதவிர, பாலதண்டாயுதபாணி சுவாமிகளுக்கும் இங்கு குருபூஜை நடத்தப்படுகிறது.

 

  • பாணாசுரன் எனும் அரக்கன் நதிக்கரையில் வழிபாடு செய்த, பூணூல் ரேகை கொண்ட லிங்கமே ‘பாணலிங்கம்’ எனப்படுகிறது. ஆயிரம் கல் லிங்கத்திற்கு இணையானது ஒரு ஸ்படிக லிங்கம். பன்னிரண்டு லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு இணையானது, ஒரு பாணலிங்கம் என ஆன்றோர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் நர்மதை நதியில் கிடைத்த இந்த பாணலிங்கம் அபூர்வ சக்தி கொண்டதாக பார்க்கப்படுகிறது.

 

  • மற்ற சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி போல் அல்லாமல் இங்குள்ள தட்சிணாமூர்த்தி சின் முத்திரையோடு காட்சி தருகிறார். சின் முத்திரை அமைப்பின்படி மற்ற மூன்று விரல்களுடன் சேராமல் ஆள் காட்டி விரல், பெருவிரலுடன் இணைந்து இருக்கும். ஆணவம் கண்மம், மாயை ஆகிய தருவதைக் குறிக்கும்.

 

திருவிழா: 

மகாசிவராத்திரி 3 நாள் திருவிழா 50 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்,

ஊட்டி – 643 001,

நீலகிரி மாவட்டம்.

 

போன்:    

+91-423-244 6717

 

அமைவிடம்:

நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள போட் அவுஸ் எனப்படும் படகுக் குழாம் இடத்திற்கு மிக அருகில் உள்ளது காந்தள் என்ற பகுதி. இங்குதான் இந்த ஆலயம் இருக்கிறது. ஊட்டி நகரின் மையப் பகுதியிலிருந்து 3 கி.மீ., தொலைவில் கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 98 கி.மீ.,

Share this:

Write a Reply or Comment

eleven − eight =