August 17 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இராமநாதபுரம்

  1. அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     முருகன்

ஊர்       :     இராமநாதபுரம்

மாவட்டம்  :     இராமநாதபுரம்

 

ஸ்தல வரலாறு:

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் இருக்கும் இடத்தில் ஒரு அரசமரம் இருந்தது. அந்த மரத்திற்கு கீழாக ஒரு வேல் நடப்பட்டு அதற்கு பூஜையும் செய்யப்பட்ட வந்தது. இதற்கு அருகாமையிலேயே நீதிமன்றமும் இருந்துள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு வருபவர்கள் தங்களது வழக்கு வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிச் செல்வார்கள். சொத்து வழக்குகளில் சிக்கியவர்கள், வாழ வழியின்றி தவிப்பவர்கள், கிரிமினல் வழக்குகளில் சிக்கிய நிரபராதிகள் என்று அனைவரும் இந்த முருகனை வழிபட்டு வாழ்வதற்கு வழிபெற்றுள்ளனர். ஆதலால், வழிவிடும் முருகன் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வழிவிடும் முருகனை வந்து வணங்கிவிட்டு செல்லும் பக்தர்களுக்கு வழிகாட்டியாகவும், வாழ்க்கை முழுவதும் துணை வருவதாகவும் நம்பிக்கை.

 

கோயில் சிறப்புகள்:

  • இத்தலத்தில் கர்ப்பகிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து அருள்பாலிப்பது மிக மிக சிறப்பு. இத்தகைய படைப்பை மிக அரிதாகவே காண இயலும்.

 

  • கோயிலின் உள்ளே “சாயா’ என அழைக்கப்படும் மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் இலங்கையிலுள்ள கதிர்காமம் முருகன் கோயிலிலும் உள்ளது.

 

  • ஒரு நல்ல வழி கிடைக்கணுமே என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். அந்த நம்முடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் ஈடேற்றித் தருவதால், இந்த முருகனுக்கு, வழிவிடு முருகன் என்றே பெயர் அமைந்ததாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

 

  • பொதுவாக எந்தவொரு கோயிலை எடுத்துக் கொண்டாலும் கோயிலுக்குள் நுழைந்தவுடன் இட து புறம் விநாயகர் இருப்பார். வலது புறம் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடனோ அல்லது தனியாகவோ நின்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். ஆனால், இந்தக் கோயிலில் சிறப்பு அம்சமாக கர்ப்பகிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து அருள் பாலிக்கின்றனர்.

 

  • இத்தலத்திற்கு அருகில் அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

 

திருவிழா: 

பங்குனி உத்திரம், தைபூசம், திருக்கார்த்திகை

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில்,

இராமநாதபுரம்- 623501

இராமநாதபுரம் மாவட்டம்.

 

போன்:    

+91-98948 87503

 

அமைவிடம்:

இராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் அமைந்துள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

four × 2 =