May 30 2018 0Comment

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்:

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்:

கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில் உள்ளது. 

இங்கு மூலவர் அனந்த சயனத்தில் உள்ளார். இதனால்தான் இந்த ஊருக்கு திருவனந்தபுரம் என்ற பெயர் வந்தது.

இக்கோவில் மூலவர் பகவான் மகாவிஷ்ணுவின் கோவிலாகும். திரு அனந்த பத்மநாபசுவாமி கோவில் என்பது இதன் மற்றொரு பெயராகும். 

வரலாறு :

இக்கோயில் நம்மாழ்வாரின் பாடல்களிலிருந்து பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. 

பின்னர் சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது.

தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1686-ல்இ தீப்பிடித்துக் கோவில் அழிந்து விட்டதால் மீண்டும் திருவிதாங்கூர் அரசின் மன்னரான மார்த்தாண்டவர்மரின் முயற்சியால் 1729-இல் இது புதுப்பிக்கப்பட்டது. 

கோவில் அமைப்பு :

பத்மநாபசாமி கோவிலின் கோபுரம் 100 அடி உயரத்துடன் ஏழு வரிசைகளைக் கொண்டுள்ளது. 

இந்த கோவில் மொத்தம் 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோவிலை சுற்றி சிறிது மற்றும் பெரிதாக 9 கோட்டைகள் உள்ளன. 

கோவிலின் முக்கிய #வாசல் முன்பாக பத்மதீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்துக்குள் 9 #கல் மண்டபங்கள் உள்ளன. 

கோவிலுக்குள் 6 #ரகசிய அறைகள் உள்ளன. இதில்இ 5 அறைகளில் நகை குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. 

மேலும் ஒரு அறை திறக்கப்படாமல் உள்ளது. ஆகம விதிப்படி 9 அறைகள் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவற்றில் 6 அறைகள் கோவிலுக்குள் உள்ளன.

இந்துக்கள் வழிபடுவதற்கு இக்கோவில் வளாகத்தில் மேலும் பல நடைகள் உள்ளன குறிப்பாக ஸ்ரீ நரசிம்ஹர், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீஐயப்பர், ஸ்ரீகணேஷர் மற்றும் ஸ்ரீஹனுமான் போன்ற தெய்வங்களை வழிபடுவதற்கான தனிப்பட்ட நடைகள் உள்ளன. 

மேலும் கோவிலைப் பாதுகாக்கும் க்ஷேத்திர பாலகர்களுக்கான நடை விஸ்வக்சேனருக்கு என்று ஒரு நடை மற்றும் கருடரை சேவிப்பதற்கும் நடைகள் உள்ளன.

கோவில் கருவறை :

கோவிலின் கற்பக்கிரகத்தில் அய்யன் மகாவிஷ்ணு அனந்தன் அல்லது ஆதிசேஷன் என வணங்கப்படும் நாகப்பாம்பின் மீது சயனித்திருக்கும் நிலையில் இறைவன் கொண்டுள்ளார்.

#நாகத்தின் முகம் மேல்நோக்கிக் காணப்படுகிறது ஈசனின் இடது கையில் தாமரை மலரின் இதமான நறுமணத்தை மிகவும் ஆனந்தமாக சுவாசிப்பது போல நமக்குத் தோன்றுகிறது.

மகாவிஷ்ணுவின் இரு தேவிகளான ஸ்ரீதேவி மற்றும் பூதேவி அவருடைய இரு பாகங்களிலும் வீற்றிருக்க பிரம்மதேவன் மகாவிஷ்ணுவின் நாபியில் இருந்து வரும் தாமரை மலரில் வீற்றிருப்பதை நாம் காணலாம்.

மயில் இறகை வைத்தே ஒவ்வொரு நாளும் வாடிய மலர்கள் நீக்கப்படுகின்றன விக்ரகத்தின் மீது படிந்திருக்கும் காட்டு சர்க்கரை யோகத்தை அழிக்காமல் பாதுகாப்பதற்கே இவ்வாறு செய்கிறார்கள். 

கோவிலின் கர்பக்கிரகம் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டதாகும் எனவே அதனை ஒற்றைக்கல் மண்டபம் என்றும் அழைப்பதுண்டு. 

இறைவரின் தரிசனம் கிடைப்பதற்கும் மற்றும் இறைவனை பூஜை செய்து வழிபடுவதற்கும் நாம் ஒற்றைக்கல் மண்டபத்தின் மீது ஏறவேண்டும்.

இந்த ஒற்றைக்கல் மண்டபத்தில் வீற்றிருக்கும் இறைவனின் அடி பணிந்து வணங்கும் நமஸ்கரித்தல் என்ற முறைமைக்கான அதிகாரம் திருவாங்கூர் மகாராஜாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

மகா விஷ்ணுவின் விக்ரகம் இந்த ஒற்றைக்கல் மண்டபத்தில் இருந்து அருள் பாலிப்பதால் இந்த கல்லின் மீது வந்து யார் இறைவனை நமஸ்கரித்து வணங்கினாலும் அல்லது அந்த மண்டபத்தில் வைத்த எந்த பொருளானாலும் இறைவனின் சொந்தமாகக் கருதப்படுகிறது.

Share this:

Write a Reply or Comment

four × 2 =