September 20 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வேடசந்தூர்

  1. அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     நரசிம்ம பெருமாள்

தாயார்          :     ஸ்ரீதேவி, பூதேவி

தீர்த்தம்         :     குடகனாறு

ஊர்             :     வேடசந்தூர்

மாவட்டம்       :     திண்டுக்கல்

 

ஸ்தல வரலாறு:

முற்காலத்தில் இங்கு வசித்த பெருமாள் பக்தர்கள் சிலர், நரசிம்மருக்கு கோயில் கட்டவேண்டுமென விரும்பினர். ஆனால், எங்கு கோயில் அமைப்பது என அவர்களுக்குத் தெரியவில்லை. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் கோயில் எழுப்பும்படி சுட்டிக்காட்டினார். அதன்பின்பு பக்தர்கள் சுவாமி காட்சி தந்த வடிவத்திலேயே சிலை வடித்து, இங்கு கோயில் எழுப்பினர்.முதலில் நரசிம்மருக்கு கோயில் அமைக்க விரும்பியதால், இந்த திருநாமத்தையே சுவாமிக்கு சூட்டினர்.

சிம்ம முகம் இல்லாத அர்ச்சாவதார (மனிதர்களின் வழிபாட்டிற்குரிய வடிவம்) வடிவத்துடன் இவர் அருள் பாலிக்கிறார். பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படியே பக்தர்கள் கோயில் எழுப்பினர். பக்தரின் கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, சிங்க முகம் இல்லாமல், மனித முகத்துடன் காட்சி தந்ததால், பக்தர்கள் அதே அமைப்பிலேயே சிலை வடித்தனர்.

 

கோயில் சிறப்புகள்:

  • இத்தலத்தில் சுவாமி நரசிம்ம பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், இங்கு பெருமாளின் நரசிம்ம வடிவம் கிடையாது. மூலஸ்தானத்தில் சங்கு, சக்கரத்துடன், அபய, வரத முத்திரைகள் காட்டியபடி சுவாமி காட்சி தருகிறார்.

 

  • குடகனாற்றின் கிழக்கு கரையில் அமைந்த கோயில் இது. மூலஸ்தானத்தில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார்.

 

  • சுவாமி எதிரே கருடாழ்வார் சன்னதி இருக்கிறது.

 

  • பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது, அதிக உக்கிரத்துடன் இருந்தார். அவரை சாந்தப்படுத்தும்படி தேவர்கள் சிவனை வேண்டினர். எனவே, அவர் சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, உக்கிரத்தைக் குறைத்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இங்கு இவர், சாந்தமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

 

  • சன்னதி முன்புள்ள மண்டபத்தில், சிவனின் லிங்க வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இங்கு ஒரே சமயத்தில் சிவன், பெருமாள் இருவரின் தரிசனம் பெறலாம்.

 

  • இங்கு ஆறு தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம்.

 

  • இத்தல இறைவன் பத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் வீர ஆஞ்சநேயர் தெற்கு நோக்கிய சன்னதியில் காட்சி தருகிறார். இவரது கையில் சவுகந்தி மலர் இருக்கிறது.

 

  • சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வித்து, புளியோதரை, சர்க்கரைப்பொங்கல் படைத்து, விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

 

திருவிழா: 

வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, கார்த்திகை பெளர்ணமி.

 

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல்12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில்,

வேடசந்தூர்- 624 710.

திண்டுக்கல் மாவட்டம்.

 

போன்:

+91- 4551 – 261 265, 99526 46389.

 

அமைவிடம்:

திண்டுக்கல்லில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் வேடசந்தூர் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

12 + 9 =