திருப்பாவை பாடல் 24:

திருப்பாவை பாடல் 24 (புகழ் மாலை) அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய். விளக்கம் : திரி விக்கிரமனாய் அவதரித்து மூவுலகையும் தன் சேவடியால் அளந்த பிரானே, உன் பாதம் போற்றி போற்றி…! […]

திருப்பாவை பாடல் 23:

திருப்பாவை பாடல் 23: (அருள் செய்க) மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். விளக்கம் : மழைக்காலத்தில் மலைக்குகையில் பெண் சிங்கத்துடன் அனைத்தையும் மறந்து உறங்கும் ஆண் சிங்கம், உறக்கம் கலைந்து கண் சிவந்து தன் […]

திருப்பாவை பாடல் 22:

திருப்பாவை பாடல் 22: (பாவங்களை நீக்குக எனல்) அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய். விளக்கம் : எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா? என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி […]

திருப்பாவை பாடல் 21 :

திருப்பாவை பாடல் 21 : (போற்றி வந்தோம் எனல்) ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் #விளக்கம் : பால் கறப்பதற்காக வைத்துள்ள பாத்திரங்கள் நிரம்பி வழியும் படி மிகுதியான பாலை அளிக்கும் வல்லமை மிக்க வளமான பசுக்களை மிகுதியாக […]

திருப்பாவை பாடல் 20:

திருப்பாவை பாடல் 20: (நப்பின்னையை உதவுக எனல்) முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்! செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய். விளக்கம் : முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தாலும் பக்தர்களுக்கு ஒரு துயரம் என்றால் முன்னின்று துயரத்தை தீர்க்கும் பெருமையை உடையவனே! துயில் எழுக… செம்மை […]

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடைய கருத்தை முழு மனதுடன் வரவேற்கிறது – ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை!!

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைச்சாரல் பகுதியில் இருந்து கொண்டு ஆன்மீகப் பணி செய்துவரும் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் (Sadhguru Jaggi Vasudev) அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. காரணம் தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது. ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல. இதை சொல்ல ஒரு தில் வேண்டும். சத்குரு அவர்களுடைய ஆணித்தரமான, அதிரடியான இந்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by