அமிர்தநாராயணப் பெருமாள்: 

அமிர்தநாராயணப் பெருமாள்:  சுவாமி : அமிர்தநாராயணப் பெருமாள். அம்பாள் : அமிர்தவள்ளி. தலச்சிறப்பு :  ராமானுஜர் வழிபட்ட தலம்.   அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரரை தரிசித்த  பிறகு,  அமிர்த நாராயண பெருமாளையும் தரிசனம் செய்தால் தான், திருக்கடையூர் வழிபாட்டு பலன்  முழுமையாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.  திருத்தல வரலாறு :  தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தனர்.  அசுரர்களை ஏமாற்றி விஷ்ணு அதை ஒரு கலசத்தில் வைத்தார்.  மீண்டும் கலசத்தை திறந்த போது அமிர்தம் சிவலிங்கமாக இருந்தது.  […]

வாகனப் பிள்ளையார் திருக்கோயில்:

வாகனப் பிள்ளையார் திருக்கோயில்: மூலவர்: – விநாயகர் பழமை: – 200 வருடங்களுக்கு முன் ஊர்: – ஆத்தூர் மாவட்டம்: – சேலம் மாநிலம்: – தமிழ்நாடு ஆத்தூர் நகரத்தில் #வசிட்ட நதி ஓடுகிறது. இன்று வறண்டு கிடந்தாலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் பெருகி ஓடிய நதியாகத்தான் இருந்தது. குறிப்பாக ஆடி மாதத்தில் மிக அதிக அளவில் தண்ணீர் ஓடும்.  200 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிள்ளையார் சிலை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அதைக் […]

கடம்பவனேசுவரர் கோயில்:

கடம்பவனேசுவரர் கோயில்: கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும்.  தேவாரம் பாடல்பெற்ற சிவாலயங்களில் 65வது தேவாரத்தலமாகவும், தென்கரைத் தேவாரத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது, தேவரா மூவர்களில் அப்பர் இச்சிவாலயத்தைப் பற்றி பாடியுள்ளார். இச்சிவாயலத்தின் மூலவர் கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை.  சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் இச்சிவாலயத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். குளித்தலை நகரானது கடம்பந்துறை, குழித்தண்டலை என்று புராண காலத்தில் அழைக்கப்படுள்ளது. இத்தலத்தில் #கடம்பம் எனும் மரம் அதிகமிருந்தமையால் கடம்பை, […]

எறும்பீஸ்வரர் கோயில்

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில்: திருவெறும்பூர் என்று தற்போது அழைக்கப்பெறும் திருஎறும்பியூர் தமிழ் நாட்டின் பெரும் நகரங்களுள் ஒன்றான திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு சிவத்தலமாகும். திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில்அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது. இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங் கொண்டு வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).  தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஏழாவது சிவத்தலமாகும். […]

தோரணைமலை முருகன்:

குகைக்கோயில் அழகன் ! தோரணைமலை முருகன்: வெண்மேகங்கள் தழுவ விண்ணைத் தொட்டு நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கை எழிலுக்குத் தோரணமாய் அமைந்திருக் கிறது, தோரண மலை.  யானையைப் போன்று காட்சியளிப்பதால் ‘வாரண மலை’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் தோரண மலை எனப் பெயர் பெற்றுவிட்ட இந்த மலையில், மாமுனிவர் அகத்தியர் தங்கியிருந்து மருத்துவப் பணி செய்திருக்கிறார்.  அவருடைய சீடரான தேரையர் மகா சமாதி அடைந்ததும் இங்குதான். இன்றைக்கும் சித்தர்கள் பலர் அரூபமாக வந்திருந்து வழிபடும் தெய்வ […]

விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்: 

விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்:  சுவாமி :  விருத்தகிரீஸ்வரர் (அ)#பழமலைநாதர், முதுகுந்தர். #அம்பாள் :  விருத்தாம்பிகை (அ) #பாலாம்பிகை, இளைய நாயகி. #தீர்த்தம் :  மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம். தலவிருட்சம் : வன்னி மரம். தலச்சிறப்பு :  உலகில் முதன்மையாக தோன்றிய மலை இங்கு புதையுண்டு அழுந்தி உள்ளதாக கருதப்படுகிறது.  மாசி மகம் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது. தல #வரலாறு :  ஆதியில் பிரம்மன் மண்ணுலகைப் படைக்க எண்ணி முதலில் நீரைப் படைத்தார்.  […]

வைத்தியநாத சுவாமி திருக்கோவில்:

வைத்தியநாத சுவாமி திருக்கோவில்: தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு வந்து வழிபடுகின்றனர்.  உயிர்களின் தீராத நோய்களைத் தீர்க்கும் பொருட்டு #தையல் நாயகியாய்த் தைல பாத்திரமும் #சஞ்சீவியும் வில்வ மரத்தடி மண்ணும் கொண்டுவர இறைவன் இங்கு வைத்தியநாதராக எழுந்தருளிய தலம். மூலவர் : வைத்தியநாதர். தாயார் : தையல்நாயகி. தல விருட்சம் : வேம்பு. தீர்த்தம் : சித்தாமிர்தம். ஆகமம் : காமிக ஆகமம். ஊர் : வைத்தீஸ்வரன் […]

ஸ்ரீநந்தீஸ்வரர் திருக்கோவில்:

ஸ்ரீநந்தீஸ்வரர் திருக்கோவில்: சிவபெருமான் லிங்க திருமேனியாக காட்சிதந்து அருளாசி வழங்கும் ஆலயங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் மூர்த்தி மகிமையாலும்,தலம், தீர்த்தம் சிறப்பாலும் மேன்மையுற்று விளங்குகின்றன. மூலவர் : ஸ்ரீநந்தீஸ்வரர். அம்மன் : ஸ்ரீஆவுடைநாயகி. தல விருட்சம் : நாகலிங்கம். பழமை : 2 ஆயிரம் ஆண்டுகள். ஊர் : ஆலந்தூர். மாவட்டம் : காஞ்சிபுரம். தல வரலாறு : பிருங்கி முனிவருக்கு சிவபெருமான் நந்தி உருவத்தில் காட்சித் தந்ததால் அவ்வாறு அழைக்கப்படுகிறார். இங்குள்ள மலையில் […]

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்:

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்: கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில் உள்ளது.  இங்கு மூலவர் அனந்த சயனத்தில் உள்ளார். இதனால்தான் இந்த ஊருக்கு திருவனந்தபுரம் என்ற பெயர் வந்தது. இக்கோவில் மூலவர் பகவான் மகாவிஷ்ணுவின் கோவிலாகும். திரு அனந்த பத்மநாபசுவாமி கோவில் என்பது இதன் மற்றொரு பெயராகும்.  வரலாறு : இக்கோயில் நம்மாழ்வாரின் பாடல்களிலிருந்து பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.  பின்னர் சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய […]

செல்லாண்டி அம்மன் திருக்கோவில்: 

செல்லாண்டி அம்மன் திருக்கோவில்:  இந்த திருக்கோவில் திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் நதிக்கரையில் வளம் பாலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த நொய்யல் நதியில் இருந்து தான் 1945 முதல் 1970 வரை அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர். மேலும் நொய் என்ற சொல் மென்மை, நுண்மை எனும் பொருள் கொண்டது. இந்த ஆற்றின்  பெயர் மென்மையான நுண்ணிய  மணற்துகள்களால் பெறப்பட்டது என்றும் கருதப்படுகிறது. இந்த நதியில் 16 அடி உயரம் பாம்பு இருப்பதாக வரலாறு கூறுகிறது.  […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by