May 30 2018 0Comment

அறை  vs அரை 

அறை  vs அரை  ஆண்டாளிடம் நான் இதுவரை மனதார வேண்டிய ஒரே  விஷயம் என்று ஒன்று உண்டு மனதார  சொல்கின்றேன் என்  தாயின் மரணத்திற்கு முன் என்  மரணம் இருக்க வேண்டும்….. காரணம் என்னை சுமந்த அவளை   நான் நால்வரோடு ஒருவனாக சுமக்க முடியாது தாயாக அவள் எனக்கு செய்ததை விட  நான் இன்று வரை அவளுக்கு செய்து அவளை மிஞ்சி இருப்பேன் என்ற கேள்விக்கு பதில் கேள்விக்குறி  தான்?????? எனக்கு தெரிந்த வரை என்னை […]

May 30 2018 0Comment

எறும்பீஸ்வரர் கோயில்

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில்: திருவெறும்பூர் என்று தற்போது அழைக்கப்பெறும் திருஎறும்பியூர் தமிழ் நாட்டின் பெரும் நகரங்களுள் ஒன்றான திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு சிவத்தலமாகும். திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில்அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது. இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங் கொண்டு வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).  தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஏழாவது சிவத்தலமாகும். […]

May 30 2018 0Comment

தோரணைமலை முருகன்:

குகைக்கோயில் அழகன் ! தோரணைமலை முருகன்: வெண்மேகங்கள் தழுவ விண்ணைத் தொட்டு நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கை எழிலுக்குத் தோரணமாய் அமைந்திருக் கிறது, தோரண மலை.  யானையைப் போன்று காட்சியளிப்பதால் ‘வாரண மலை’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் தோரண மலை எனப் பெயர் பெற்றுவிட்ட இந்த மலையில், மாமுனிவர் அகத்தியர் தங்கியிருந்து மருத்துவப் பணி செய்திருக்கிறார்.  அவருடைய சீடரான தேரையர் மகா சமாதி அடைந்ததும் இங்குதான். இன்றைக்கும் சித்தர்கள் பலர் அரூபமாக வந்திருந்து வழிபடும் தெய்வ […]

May 30 2018 0Comment

விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்: 

விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்:  சுவாமி :  விருத்தகிரீஸ்வரர் (அ)#பழமலைநாதர், முதுகுந்தர். #அம்பாள் :  விருத்தாம்பிகை (அ) #பாலாம்பிகை, இளைய நாயகி. #தீர்த்தம் :  மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம். தலவிருட்சம் : வன்னி மரம். தலச்சிறப்பு :  உலகில் முதன்மையாக தோன்றிய மலை இங்கு புதையுண்டு அழுந்தி உள்ளதாக கருதப்படுகிறது.  மாசி மகம் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது. தல #வரலாறு :  ஆதியில் பிரம்மன் மண்ணுலகைப் படைக்க எண்ணி முதலில் நீரைப் படைத்தார்.  […]

May 30 2018 0Comment

எத்தனையோ மனிதர்கள் ….

எத்தனையோ மனிதர்கள்  வித விதமான பாடங்களை என் முதுகுக்கு பின்  நடத்தி சென்று இருக்கின்றார்கள்  நான் இவருக்கு வகுப்பு எடுத்திருந்தாலும் நான் பாடம் படிக்க நிறைய இருக்கின்றது இவரிடம்….. நிறைய பேசப்படுவார் இவர் இனி  ஆவடி சாய் சுபா சரவணன் …..

May 30 2018 0Comment

முன்னோக்கி செல்கின்றேன் 

முன்னோக்கி செல்கின்றேன்  மிகுந்த எச்சரிக்கையுடன்  உறுதியுடன்   கால் பதித்து …. பின் இருந்து  பார்ப்பவர்கள்  பின்னோக்கிய பயணம்  என நினைக்க  நான்  என் வாழ்க்கையை எந்த தலைமைக்கும் அர்ப்பணிக்காமல்  எனக்கென்று  புதிய  தனி பாதையில்…… வெல்ல  வெற்றிகள்  எனக்காக என்று காத்திருக்கும் போது இனி எல்லாம் நலமே……….      

May 30 2018 0Comment

வைத்தியநாத சுவாமி திருக்கோவில்:

வைத்தியநாத சுவாமி திருக்கோவில்: தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு வந்து வழிபடுகின்றனர்.  உயிர்களின் தீராத நோய்களைத் தீர்க்கும் பொருட்டு #தையல் நாயகியாய்த் தைல பாத்திரமும் #சஞ்சீவியும் வில்வ மரத்தடி மண்ணும் கொண்டுவர இறைவன் இங்கு வைத்தியநாதராக எழுந்தருளிய தலம். மூலவர் : வைத்தியநாதர். தாயார் : தையல்நாயகி. தல விருட்சம் : வேம்பு. தீர்த்தம் : சித்தாமிர்தம். ஆகமம் : காமிக ஆகமம். ஊர் : வைத்தீஸ்வரன் […]

May 30 2018 0Comment

ஸ்ரீநந்தீஸ்வரர் திருக்கோவில்:

ஸ்ரீநந்தீஸ்வரர் திருக்கோவில்: சிவபெருமான் லிங்க திருமேனியாக காட்சிதந்து அருளாசி வழங்கும் ஆலயங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் மூர்த்தி மகிமையாலும்,தலம், தீர்த்தம் சிறப்பாலும் மேன்மையுற்று விளங்குகின்றன. மூலவர் : ஸ்ரீநந்தீஸ்வரர். அம்மன் : ஸ்ரீஆவுடைநாயகி. தல விருட்சம் : நாகலிங்கம். பழமை : 2 ஆயிரம் ஆண்டுகள். ஊர் : ஆலந்தூர். மாவட்டம் : காஞ்சிபுரம். தல வரலாறு : பிருங்கி முனிவருக்கு சிவபெருமான் நந்தி உருவத்தில் காட்சித் தந்ததால் அவ்வாறு அழைக்கப்படுகிறார். இங்குள்ள மலையில் […]

May 30 2018 0Comment

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்:

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்: கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில் உள்ளது.  இங்கு மூலவர் அனந்த சயனத்தில் உள்ளார். இதனால்தான் இந்த ஊருக்கு திருவனந்தபுரம் என்ற பெயர் வந்தது. இக்கோவில் மூலவர் பகவான் மகாவிஷ்ணுவின் கோவிலாகும். திரு அனந்த பத்மநாபசுவாமி கோவில் என்பது இதன் மற்றொரு பெயராகும்.  வரலாறு : இக்கோயில் நம்மாழ்வாரின் பாடல்களிலிருந்து பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.  பின்னர் சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய […]

May 30 2018 0Comment

மீன்

மீன் மீனாக  பிறந்து  சாவது  என்று  முடிவெடுத்துவிட்டால் பொழுதுபோக்கிற்கு  மீன் பிடிப்பவனின்  தூண்டிலில்  சிக்காதே பிழைப்பிற்கு  மீன்  பிடிப்பவனின்  வலையில்  சிக்கிடு உன்  மரணம் கூட ஒருவனை  வாழ வைக்க வேண்டும் நீ வாழ வேண்டும் என்றால் அடுத்தவன் வலி இல்லாமல் வாழ வழி ஏற்படுத்தி கொடு கொடு கிடைக்கும் கொடு நிறைய கொடு கொடு கொடுத்து  கொண்டே இரு கட்டாய கவிஞன் #மீன் #கொடு #வழிவிடு #பிறப்பு #இறப்பு #உதவி #மரணம் #Fish #Give #தானம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by